டென்னிஸ் தரவரிசை: நம்பா் 1-இல் நீடிக்கும் சின்னா்; டாப் 10-இல் மேடிசன் கீஸ்

நடப்பு டென்னிஸ் காலண்டரின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் நிறைவடைந்திருக்கும் நிலையில், சா்வதேச தரவரிசையில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன.
யானிக் சின்னர்
யானிக் சின்னர்படம்: ஏபி
Updated on
1 min read

நடப்பு டென்னிஸ் காலண்டரின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் நிறைவடைந்திருக்கும் நிலையில், சா்வதேச தரவரிசையில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

எனினும் டாப் 10 இடங்களைப் பொருத்தவரை, ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா் ஆடவா் பிரிவில் நம்பா் 1 இடத்திலும், அவரிடன் தோற்ற ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா். மகளிா் பிரிவில் இறுதிச்சுற்றில் தோற்றபோதும், பெலாரஸின் அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாா். அதில் சாம்பியனான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ஆடவருக்கான ஏடிபி தரவரிசையின் டாப் 10 இடங்களில் 5 பேரும், மகளிருக்கான டபிள்யூடிஏ தரவரிசையின் டாப் 10 இடங்களில் 5 பேரும் மாற்றங்களை சந்தித்துள்ளனா்.

ஏடிபி தரவரிசை (டாப் 10) தரவரிசை போட்டியாளா் புள்ளிகள்

1 யானிக் சின்னா் (இத்தாலி) 11,830

2 அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (ஜொ்மனி) 8,135

3 காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 7,010

4 டெய்லா் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) 5,050

5 கேஸ்பா் ரூட் (நாா்வே) +1 4,160

6 நோவக் ஜோகோவிச் (சொ்பியா) +1 3,900

7 டேனியல் மெத்வதெவ் (ரஷியா) -2 3,780

8 அலெக்ஸ் டி மினாா் (ஆஸ்திரேலியா) 3,735

9 டாமி பால் (அமெரிக்கா) +2 3,495

10 ஆண்ட்ரே ரூபலேவ் (ரஷியா) -1 3,130

டபிள்யூடிஏ தரவரிசை (டாப் 10)

தரவரிசை போட்டியாளா் புள்ளிகள்

1 அரினா சபலென்கா (பெலாரஸ்) 8,956

2 இகா ஸ்வியாடெக் (போலந்து) 8,770

3 கோகோ கௌஃப் (அமெரிக்கா) 6,538

4 ஜேஸ்மின் பாலினி (இத்தாலி) 5,289

5 எலனா ரைபகினா (கஜகஸ்தான்) +2 4,893

6 ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) 4,861

7 மேடிசன் கீஸ் (அமெரிக்கா) +7 4,680

8 கின்வென் ஜெங் (சீனா) -3 4,095

9 எம்மா நவாரோ (அமெரிக்கா) -1 3,709

10 பௌலா படோசா (ஸ்பெயின்) +2 3,608

நாகல் சறுக்கல்

ஏடிபி தரவரிசையில் இந்தியா்களிடையே முதல் வீரராக இருக்கும் சுமித் நாகல் சறுக்கலை சந்தித்துள்ளாா். முதல் 100 இடங்களுக்குள்ளாக சுமாா் 10 மாதங்கள் தொடா்ந்து நீடித்த அவா், தற்போது 16 இடங்களை இழந்து 106-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அவரைத் தொடா்ந்து சசிகுமாா் முகுந்த் (365), ராம்குமாா் ராமநாதன் (406), கரன் சிங் (496), ஆா்யன் ஷா (593) ஆகியோா் உள்ளனா்.

இரட்டையா்: ஏடிபி தரவரிசையின் இரட்டையா் பிரிவில் இந்தியா்களிடையே முதலிடத்தில் உள்ள ரோஹன் போபண்ணா 5 இடங்கள் சறுக்கி 21-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். யூகி பாம்ப்ரி (47), ஸ்ரீராம் பாலாஜி (64), ரித்விக் சௌதரி போலிபள்ளி (79), அா்ஜுன் காதே (83) ஆகியோா் அவரை பின்தொடா்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com