இளவரசனே, என்னுடைய அரியணை காலியாக இருக்கிறது..! நெய்மருக்காக பீலே பேசிய விடியோ!

சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மருக்காக பீலே பேசியதாக ஏஐ விடியோ வைரல்.
நெய்மரைப் பாராட்டும் பீலே.
நெய்மரைப் பாராட்டும் பீலே. கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மருக்காக பீலே பேசியதாக ஏஐ விடியோ வைரலாகியுள்ளது.

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறியுள்ளார். சௌதி அரேபிய கிளப் அல்-ஹிலால் உடனான ஒப்பந்தம் இருவரின் சம்மதத்துடன் நேற்று (ஜன.25) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார்.

நெய்மர்
நெய்மர்படம்: ஏபி

சன்டோஷ் கிளப் பிரெசிலின் லெஜண்ட் பீலே கூறியதாக ஏஐ மூலம் விடியோ ஒன்ரை வெளியிட்டுள்ளார்கள். அது பிரேசிலுக்கு மட்டுமல்லாமல் கால்பந்து ரசிகர்களுக்குமே நெஞ்சை தொடுவதாக உள்ளது.

அதில் பீலே கூறியதாக இருந்ததாவது:

ஹலோ நெய்மர், எப்படி இருக்கிறாய்? யார் பேசுகிறேன் என உனக்குத் தெரியும். நம்முடைய மீன் எப்படி இருக்கிறது? நான் எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்கிறேன். இது கடினமான காலம். இந்த நகரம் சோகத்தில் இருக்கிறது. வீடு இருட்டாக இருக்கிறது. என்னுடைய அரியணை காலியாக இருக்கிறது. என்னுடைய சீருடை உபயோகிக்காமல் அறையில் இருக்கிறது. அதை அணிவதற்கு ஒருவருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அது யாரென உனக்குத் தெரியும் அல்லவா?

இங்கேயே வளர்ந்து அனைத்தையும் வென்று எப்போதையும் விட மகிழ்ச்சியாக இருந்த ஒரு இளைஞன். பிறகு உலகத்தின் சிறந்த வீரராக மாற மற்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்தான். இது உனக்கும் எனக்குமானது நெய்மர். சன்டோஷ் மட்டுமல்ல பிரேசிலுக்கும் நீ தேவை. உன்னுடைய இதயம் சொல்வதைக் கேள், வீட்டிற்குச் செல். உனது நகரத்துக்கு, உனது மக்களிடம் செல். என்னுடைய அரியணையையும் கிரீடத்தையும் நீ அணிந்துக்கொள். வீட்டிற்கு வந்து என்னுடைய உடையை அணிந்து 6ஆவது கோப்பையை வென்று தா. நீ என்ன சத்தியம் செய்தாய் என்பதை நினைவிருக்கிறதா? நான் போகிறேன், ஆனால் திரும்பவும் வருவேன். என்னுடைய இளவரசனே, உனக்கு நான் மேலிருந்து கை தட்டுவேன் எனக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com