12 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பும் நெய்மர்..! உருக்கமாக பேசிய விடியோ வைரல்!

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர் தனது சிறுவயது அணிக்கு திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நெய்மர் பகிர்ந்த விடியோவிலுள்ள காட்சிகளின் தொகுப்பு...
நெய்மர் பகிர்ந்த விடியோவிலுள்ள காட்சிகளின் தொகுப்பு... படங்கள்: எக்ஸ் / நெய்மர்.
Published on
Updated on
1 min read

பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தனது சிறுவயது அணிக்கு திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு அதில் தனக்கு தேவையான அன்பு கிடைக்குமிடம் சன்டோஷ் கிளப்தான் எனக் கூறியுள்ளார்.

நெய்மர் ஜூனியர் சௌதி அரேபிய கிளப் அல்-ஹிலால் உடனான ஒப்பந்தம் ஜன.25இல் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

32 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார்.

முதன்முதலாக சன்டோஷ் கிளப்பில் விளையாடிதான் நெய்மர் புகழ்பெற்றார். அதற்கு பிறகுதான் 2013இல் பார்சிலோனா அணிக்கு தேர்வாகி பல மறக்க முடியாத ஆட்டங்களை மெஸ்ஸியுடன் ஆடினார்.

அல்ஹிலால் அணியில் ஏசிஎல் காயத்தினால் அவதியுற்று கடந்தாண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி அதிர்ச்சியளித்தார்.

மீண்டும் சன்டோஷ் அணியில்

நெய்மர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

நான் எனது வீட்டிற்கு திரும்பியதுபோல் இருக்கிறது. நான் எனது நண்பர்களுடனும் குடும்பத்துடனும் இருக்கிறேன். அவர்கள் சில விஷயங்களை எழுத எனக்கு உதவினார்கள். நாளைவரை என்னால் காத்திருக்க முடியாது. நான் என்ன முடிவெடுப்பேன் என எனது குடும்பம், நண்பர்களுக்குத் தெரியும். நான் மீண்டும் சன்டோஷ் கிளப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன்.

உலகம் முழுவதுமுள்ள எனது ரசிகர்களுக்கு நன்றி. எனது நீண்டநாள்களாக இருந்துவரும் ஆசை நனவானது.

உலகின் மிகச் சிறந்த கால்பந்து கிளப்பில் இருந்து பிரிந்து சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. நேற்றுபோலத்தான் இருக்கிறது. சன்டோஷ் உடனான எனது உணர்வு, ரசிகர்கள் எதுவும் மாறவில்லை.

ரசிகர்களுக்கு நன்றி

ரியாத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சௌதி அரேபியா என்னை மிகவும் பிரமாண்டமாக வரவேற்றது. என்னை மட்டுமல்ல எனது குடும்பத்தையும் அப்படியே செய்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்தக் கணங்களை எப்போதும் நினைத்திருப்பேன். ஆனால், நான் மிகவும் மோசமான காயத்தினால் பாதிக்கப்பட்டேன். 2034 உலகக் கோப்பைக்காக மிகவும் எதிர்பார்க்கிறேன். சௌதி மக்கள் அதற்கு உரியவர்கள். நான் அங்கு இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் வளர்ச்சியடைவதை பார்த்து வருகிறேன். அதற்கு நான் மீண்டும் விளையாட வேண்டும்.

அடுத்த சில வருடங்களில் நான் சந்திக்கும் சவால்களுக்கு எனக்கு தேவையான அன்பை சன்டோஷ் அணியினால் மட்டுமே தரமுடியும். எந்த அணிக்கு ஆதரவளித்தாலும் எனக்காக நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் என நம்புகிறேன். எனது கடினமான நேரங்களிலும் என்னுடன் இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

கால்பந்து விளையாடுவதுதான் எனக்கு பிடித்தமானது. அது மட்டும்தான் என்னை மகிழ்விக்கிறது. கடவுள் அருள் எங்களுக்கு வலிமயை தரட்டும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com