20-0: விம்பிள்டனில் சாதனை படைத்த ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸில் நோவக் ஜோகோவிச் நிகழ்த்திய சாதனை குறித்து...
Novak Djokovic of Serbia celebrates after beating Alexandre Muller of France in their first round men's singles match at the Wimbledon Tennis Championships in London,
நோவக் ஜோகோவிச். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகளில் முதல் சுற்றில் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலெக்ஸாண்டர் முல்லருடன் மோதிய நோவக் ஜோகோவிச் முதல் செட்டில் அசத்திய ஜோகோவிச் 2-ஆவது செட்டில் டை பிரேக்கரில் இழந்தார்.

அடுத்தடுத்த செட்களில் மீண்ட ஜோகோவிச் எளிதாக வென்றார். இறுதியில் ஜோகோவிச் 6-1, 6-7 (7), 6-2, 6-2 என்ற செட்களில் வென்று அசத்தினார்.

3 மணி நேரம் 20 நிமிடம் சென்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் முதல் செர்வில் 82 சதவிகிதமும் இரண்டாவது செர்வில் 63 சதவிகிதமும் வென்றார்.

ஜோகோவிச் முதல்முறையாக 2005-இல் விம்பிள்டனில் விளையாடினார். இதுவரை நடந்த விம்பிள்டன் போட்டிகளில் தான் விளையாடிய அனைத்து முதல் சுற்றுப் போட்டிகளிலும் (20-0) வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜோகோவிச் இரண்டாவது சுற்றில் டேனியல் எவன்ஸ் உடன் நாளை (ஜூலை 3) மோதுகிறார்.

Summary

Djokovic continued to display remarkable athleticism extend his perfect 20-0 record in opening matches at Wimbledon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com