இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல்

இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் "குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
Published on

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் "குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய திண்டுக்கல், அதில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) மோதுகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சேப்பாக் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்க்க, திண்டுக்கல் 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற திண்டுக்கல், பந்துவீச்சை தேர்வு செய்தது. சேப்பாக் பேட்டர்களில், நாராயண் ஜெகதீசன் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 81, கேப்டன் பாபா அபராஜித் 67 ரன்கள் விளாசினர்.

ஆஷிக் 8, மோகித் ஹரிஹரன் 4, விஜய் சங்கர் 0, ஸ்வப்னில் சிங் 6, தினேஷ் ராஜ் 8 ரன்களுக்கு வெளியேற, ஓவர்கள் முடிவில் அபிஷேக் தன்வர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். திண்டுக்கல் பெளலர்களில் ரவிச்சந்திரன் சசிதரன் 2, வெங்கடேஷ் புவனேஸ்வர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 179 ரன்களை வெற்றி நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணியில் விமல் குமார் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 65, பாபா இந்திரஜித் 42, ஷிவம் சிங் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 21, மான் பாஃப்னா 2, ஹன்னி சைனி 12 ரன்களுக்கு வெளியேற, தினேஷ் 5, கார்த்திக் சரண் 4 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சேப்பாக் பெüலர்களில் பிரேம்குமார் 2, விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், லோகேஷ் ராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

X
Dinamani
www.dinamani.com