செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!

குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு மாக்னஸ் கார்ல்சென் பேசியதாவது...
Carlsen playing with Gukesh.
குகேஷுடன் விளையாடிய கார்ல்சென். படம்: எக்ஸ் / கிராண்ட்செஸ் டூர்.
Published on
Updated on
1 min read

தமிழக வீரர் டி. குகேஷிடம் மீண்டும் ஒருமுறை மாக்னஸ் கார்ல்சென் தோல்வியுற்றார். அதன்பிறகு கார்ல்சென் அளித்த பேட்டியில் தனக்கு செஸ் விளையாட பிடிக்கவில்லை எனக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

குரேஷியாவில் நடைபெறும் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஜ் தொடரின் 6-ஆவது சுற்றில் உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ் முன்னாள் உலக சாம்பியனும் உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்செனும் மோதினார்கள்.

குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்கள்.

இந்தப் போட்டியில் குகேஷின் 49-ஆவது நகர்த்தலில் கார்ல்சென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சமீபத்தில் நார்வே செஸ் தொடரிலும் கார்ல்செனை குகேஷ் வீழ்த்தினார். இருப்பினும், கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வென்றார். அதனால்தான் அவர் உலகின் நம்.1 வீரராக இருக்கிறார்.

தமிழக வீரர் குகேஷை பலமுறை பலவீனமாக வீரர் என்றுகூறிய கார்ல்சென் ஒரே மாதத்திற்குள் 2 முறை தோல்வியுற்றுள்ளார்.

போட்டிக்குப் பிறகு கார்ல்சென் கூறியதாவது:

தற்போதைக்கு எனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை. நான் விளையாடும்போது எனக்கு சரியான மனநிலை அமையவில்லை.

நான் தொடர்ச்சியாக தயங்கி தயங்கி விளையாடியதால் தற்போது மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளேன்.

குகேஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தத் தொடர் மிகவும் நீண்டது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றது பாராட்டத்தக்கது என்றார்.

Summary

World number one Magnus Carlsen says he is struggling to enjoy chess after suffering a second consecutive defeat to reigning world champion D Gukesh, who the Norwegian has described as a "weak" player multiple times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com