எம்மா ரடுகானு கூறுவது உண்மைதான்... 2023-இன் அனுபவம் பகிர்ந்த சபலென்கா!

விம்பிள்டன் தோல்விக்கு எம்மா ரடுகானு கூறிய காரணத்துக்கு சபலென்கா கூறியதாவது...
Aryna Sabalenka of Belarus celebrates after beating Emma Raducanu of Britain to win a third round women's singles match at the Wimbledon
வெற்றிப் பெற்ற களிப்பில் சபலென்கா... Kin Cheung
Published on
Updated on
1 min read

விம்பிள்டன் தோல்விக்கு எம்மா ரடுகானு கூறிய காரணத்துக்கு சபலென்காவும் ஆமோதித்துள்ளார்.

விம்பிள்டன் மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்கனை எம்மா ரடுகானுவும் லண்டனில் உள்ள கூரை மூடப்பட்ட சென்டர் கோர்ட்டில் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் சபலென்கா 7-6(6) , 6-4 என த்ரில் வெற்றி பெற்றார்.

இதில் எம்மா ரடுகானு தோல்வியுற்றாலும் பெரும்பாலும் வெற்றிபெறும் இடத்திலிருந்து சில மில்லி மீட்டர்களில் எல்லைக் கோட்டை தாண்டி அடித்ததால் தோல்வியுற்றார்.

தனது ராக்கெட்டில் இருக்கும் இழைநார்கள் (Strings) இறுக்கமாக பின்னப்படிருந்ததால் பந்துகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பறந்ததாக ரடுகானு கூறினார்.

எம்மா ரடுகானு கூறுவது உண்மைதான்... 2023-இல் ஓர் அனுபவம்

எம்மா ரடுகானுவின் காரணத்திற்கு சபலென்கா கூறியதாவது:

ஆமாம், பந்துகள் அதிகமாக பறந்தன். அதனால்தான் நான் எப்போதுமே கூடுதலாக 2 ராக்கெட்டுகளை வைத்திருப்பேன்.

2 ராக்கெட்டுகளின் இழைநார்களை இறுக்கமாக இருக்கும்படியும், 2 ராக்கெட்டுகளில் தளர்வாக இருக்கும்படியும் வைத்திருப்பேன்.

2023 பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் எனக்கு ஏற்ற இறுக்கமான இழைநார்கள் கொண்ட ராக்கெட் அமையவில்லை. அதனால் நான் தோல்வியுற்றேன்.

அந்தத் தோல்விக்குப் பிறகு நான் கூடுதலாக 4 ராக்கெட்டுகளை எனது அணியினரிடம் சொல்லி வைத்திருப்பேன். ஏனெனில், நாம் தினமும் ஒரே மாதிரியான ஆற்றலுடன் இருக்க மாட்டோம். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

Summary

Sabalenka also agreed with Emma Raducanu's explanation for her Wimbledon loss in racket strings Tension issues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com