
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் லியோனல மெஸ்ஸி (38 வயது) இரண்டு கோல்கள் அடித்து இன்டர் மியாமிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி பிஎஸ்ஜியுடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியுற்றது.
இந்தத் தோல்விக்குப் பிறகு எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி மாண்ட்ரியல் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-1 என வென்றது. லியோனல் மெஸ்ஸி இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியில் முதல் 2-ஆவது நிமிஷத்திலேயே மாண்ட்ரியல் அணியின் பிரின்ச்ஸ் ஓவ்சு கோல் அடித்து அசத்தினார்.
அதற்குப் பதிலடியாக மெஸ்ஸி உதவியினால் அல்லெண்டா 33-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் இருக்கும்போது மெஸ்ஸி தனது வழக்கமான அற்புதத்தை நிகழ்த்தி 40-ஆவது நிமிஷத்திலும் 62-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்.
குறிப்பாக 62-ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் 6-7 வீரர்களை ட்ரிப்ளிங் செய்து மெஸ்ஸி அடித்த கோல் அவரை 2011-இல் பார்த்ததுபோல் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.