விம்பிள்டனில் தந்தைக்காக மகன் செய்த செயல்..! நெகிழ்ச்சியான விடியோ!

விம்பிள்டனில் நடந்த மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து...
Sem Verbeek orchestrated the Centre Court crowd to sing Happy Birthday to his father, Frank
விம்பிள்டனில் தந்தைக்காக மகன் செய்த செயல்.படங்கள்: இன்ஸ்டா / விம்பிள்டன்.
Published on
Updated on
1 min read

விம்பிள்டனில் தந்தையின் பிறந்த நாளுக்காக மகன் செய்த செயலால் அவர் கண்கலங்கிய விடியோ வைரலாகி வருகிறது.

லண்டனில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செம் வீர்பெக்- கேடரினா சினியாகோவா ஜோடியும் ஜோ சலிஸ்பெரி- லூயிசா ஸ்டெபானி ஜோடியும் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் 2-0 என செம் வீர்பெக்- கேடரினா சினியாகோவா வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.

Winner Sem Verbeek of the Netherlands, left, and Katerina Siniakova of Czech Republic, right,
கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற இணை. படம்: ஏபி

போட்டி முடிந்தபிறகு நெதர்லாந்தைச் சேர்ந்த செம் வீர்பெக் தனது தந்தையின் பிறந்த நாளுக்காக அனைவரையும் பாடல் பாடும்படிக் கூறினார்.

செம் வீர்பெக் கூறியதாவது:

இது நிச்சயமாக எனது தந்தைக்குப் பிடிக்காது. ஆனால், எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று எனது தந்தையின் பிறந்த நாள். அதனால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தக் கோப்பை அவருக்குச் சமர்ப்பணம்.

இதற்கு முன்பாக நான் இதைச் செய்ய விரும்புகிறேன். அவரது பெயர் பிராங். அவருக்காக நாம் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினால் நன்றாக இருக்கும்.

தயாரா? மூன்று, இரண்டு, ஒன்று. பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் பிராங் என்றார்.

செம் வீர்பெக் உடன் இணைந்து பார்வையாளர்கள் அனைவரும் வாழ்த்துப் பாடலை இசையமைத்துக்கொண்டே பாடினார்கள். அவரது தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இந்த விடியோவை விம்பிள்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

Summary

Sem Verbeek orchestrated the Centre Court crowd to sing Happy Birthday to his father Frank

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com