
கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த மோதல்கள் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அதிலும் பிஎஸ்ஜி பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கடுமையான விமசர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, செல்ஸி அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி அணியை 3-0 என செல்ஸி வென்றது.
இந்தப் போட்டியில் கடைசி சில நிமிஷங்கள் இரு அணிக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் செல்ஸி வீரர் ஜாவோ பெட்ரோவை கீழே தள்ளியது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.
பெட்ரோ கீழே விழுந்ததும் செல்ஸி வீரர்கள் பிஎஸ்ஜி வீரர்களை சூழ்ந்துக் கொண்டனர்.
பிஎஸ்ஜி கோல் கீப்பர் டோன்னரும்மாவை சூழ்ந்தார்கள். இரு அணியினருமே ஆக்ரோஷமாகப் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி வீரர் நெவேஸுக்கு 85-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
ஜாவோ பெட்ரோ இந்த மோதல் குறித்து, “ஆண்ட்ரே சன்டோஷை பிஎஸ்ஜி வீரர்கள் சூழத் தொடங்கினார்கள். அவரைப் பாதுகாக்கவே நான் முன்னாடி வந்தேன். கால்பந்தில் இதெல்லாம் சகஜம்தான்” எனப் பெருந்தன்மையாகப் பேசினார்.
பிஎஸ்ஜி வீரர் ஹகிமி செல்ஸி வீரர் ஆண்ட்ரே சன்டோஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் இந்த மோதலுக்கான உடனடி காரணமாக அமைந்தது.
பிஎஸ்ஜி அணியினரின் மோதல்போக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிஎஸ்ஜி பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கடுமையான விமசர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.