Chelsea teammates with the Club World Cup. With Trump.
கிளப் உலகக் கோப்பையுடன் செல்ஸி அணியினர். உடன் டிரம்ப். படம்: ஏபி, செல்ஸி.

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான செல்ஸி குறித்து...
Published on

இங்கிலாந்தின் கால்பந்து அணியான செல்ஸி இந்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த அணியாக மாறியுள்ளது.

பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றதால் இந்த அணி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

செல்ஸி கால்பந்து கிளப் இங்கிலாந்தில் 1905ஆம் ஆண்டு உருவானது. மேற்கு லண்டனில் இந்த கிளப் அமைந்துள்ளது.

இந்தக் கால்பந்து அணிக்கு அமெரிக்க தொழிலதிபர் டாட் போஹ்லி தலைவராக இருக்கிறார்.

என்ஸோ மரேஸ்கா கடந்த 2024 முதல் செல்ஸி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்துவது சாதாரண விஷயமில்லை என கால்பந்து ரசிகர்கள் செல்ஸியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் 21-ஆம் நூற்றாண்டில் அதிகமான மேஜர் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

இங்கிலாந்து கிளப் அணிகளில் அதிக கோப்பைகள்

1. செல்ஸி - 21 கோப்பைகள்

2. மான்செஸ்டர் சிட்டி - 20 கோப்பைகள்

3. மான்செஸ்டர் யுனைடெட் - 18 கோப்பைகள்

4. லிவர்பூல் - 17 கோப்பைகள்

5. ஆர்செனல் - 7 கோப்பைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com