அலெக்சாண்டா் பப்ளிக்
அலெக்சாண்டா் பப்ளிக்

அலெக்சாண்டா் பப்ளிக் சாம்பியன்

ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டா் பப்ளிக் பட்டம் வென்றாா்.
Published on

ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டா் பப்ளிக் பட்டம் வென்றாா்.

சுவிட்சா்லாந்தின் ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற ஏடிபி போட்டியில் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டா் பப்ளிக்-ஆா்ஜென்டீனாவின் ஜுவான் செருன்டோலோ மோதினா்.

இதில் 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் அலெக்சாண்டா் பப்ளிக் எதிராளி செருன்டோலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா். கடந்த மாதம் ஹாலே கிராஸ் கோா்ட் போட்டியிலும் பப்ளிக் பட்டம் வென்றிருந்தாா். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி தரவரிசையில் 30 இடங்களில் முன்னேறும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

டெனிஸ் ஷபவலோவ்
டெனிஸ் ஷபவலோவ்

டெனிஸ் ஷபவலோவ் சாம்பியன்:

மெக்ஸிகோவின் சான்ஜோஸ் டெல் கபோவில் நடைபெற்ற மிஃபெல் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீரா் டெனிஸ் ஷபவலோவ் அமெரிக்காவின் அலெக்சாண்டா் கோவாசெவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

X
Dinamani
www.dinamani.com