மகளிர் யூரோ: கூடுதல் நேரத்தில் முதல் கோல்..! ஸ்பெயின் இறுதிப் போட்டிக்குத் தகுதி!

யூரோ மகளிர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வென்றது குறித்து...
Spain players celebrate after winning the Women's Euro 2025 semifinal soccer match between Germany and Spain
அரையிறுதியில் வென்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள்... படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின் அணி வென்றது.

ஸ்விட்சர்லாந்தில் லெட்ஸிக்ரண்ட் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜெர்மனியும் ஸ்பெயின் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 90 நிமிஷங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் இருந்தன. பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

கூடுதல் நேரத்தில் 113-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் அணியின் ஐதானா பொன்மாட்டி கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் ஸ்பெயின் 67 சதவிகித பந்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 86 சதவிகித துல்லியத்துடன் 720 பாஸ்களை செய்து அசத்தியது.

கடந்தாண்டு மகளிருக்கான பேலந்தோர் (தங்கப் பந்து) விருதை பொன்மாட்டி வென்றது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்துடன் மோதுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு காலிறுதியில் இவ்விரு அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி அரையிறுதியில் இதுவரை 10இல் 9 முறை வென்றிருக்க ஸ்பெயின் அந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Summary

The win set up a decider against holder England in Basel on Sunday in a repeat of the 2023 World Cup final that saw the Spaniards crowned world champions for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com