
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் ரசிகருடன் சண்டையிட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பார்சிலோனா அணிக்காக விளையாடி புகழ்பெற்றவர் நெய்மர். பின்னர், பிஎஸ்ஜி, அல் ஹிலால் அணிக்காக விளையாடியிருக்கிறார்.
பல காயங்களுக்குப் பிறகு தனது சிறுவயது கால்பந்து அணியான சன்டோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார்.
சீரிஸ் ஏ தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்டோஷ் அணியும் இன்டர்நேஷனல் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 40-ஆவது நிமிஷத்தில் ரசிகருடன் நெய்மர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
33 வயதாகும் நெய்மர் 700 கோல்கள் அடிப்பதில் பங்காற்றி இருக்கிறார்.
இருப்பினும் சமீப காலத்தில் காயத்தினால் அவதியுறும் அவருக்கு பின்னடைவுகள் ஏராளமாக இருக்கின்றன.
சன்டோஷ் அணி ரசிகர் அவரையும் அவர்து குடும்பத்தாரையும் ஏதோ அவதூறாகப் பேசவே இப்படியான வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் 1-2 என சன்டோஷ் அணி பின் தங்கிய நிலையில் 90+4-ஆவது நிமிஷத்தில் நெய்மர் அடித்த பந்து வலையின் கம்பி விளிம்பில் பட்டு உள்நோக்கிச் சென்றது.
நெய்மர் அதற்குள்ளாக ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர்தான் அவர் அடித்த ஷாட் கோலாக மாறவில்லை எனப் புரிந்தது.
இறுதியில் சன்டோஷ் அணி 1-2 எனத் தோல்வியுற்றது. 20 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் இந்த அணி 17-ஆவது இடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.