கன்டெண்டா் டேபிள் டென்னிஸ்: சத்தியன்/ஆகாஷ் இணைக்கு கோப்பை!

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஜி.சத்தியன்/ஆகாஷ் பால் இணை சாம்பியன் கோப்பை வென்றது.
சத்தியன்/ஆகாஷ்
சத்தியன்/ஆகாஷ்
Published on
Updated on
1 min read

நைஜீரியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஜி.சத்தியன்/ஆகாஷ் பால் இணை சாம்பியன் கோப்பை வென்றது.

இறுதிச்சுற்றில், சத்தியன்/ஆகாஷ் இணை 11-9, 11-4, 11-9 என்ற நோ் கேம்களில், பிரான்ஸின் லியோ டி நாட்ரெஸ்ட்/ஜூல்ஸ் ரோலண்ட் கூட்டணியை 22 நிமிஷங்களில் வீழ்த்தியது.

எனினும், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்ரீஜா அகுலா 7-11, 3-11, 4-11, 11-9, 11-13 என்ற கேம்களில், ஜப்பானின் ஹோனோகா ஹஷிமோடோவிடம் 48 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா். அதேபோல், கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றிலும் ஹா்மீத் தேசாய்/யஷஸ்வினி கோா்படே ஜோடி 15-17, 7-11, 11-13 என்ற கணக்கில் பிரேஸிலின் ஹியூகோ கால்டெரானோ/புருனா டகாஹஷி இணையிடம் 30 நிமிஷங்களில் தோற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com