2-ஆவது சுற்றில் சாத்விக்/சிராக் இணை

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.
2-ஆவது சுற்றில் சாத்விக்/சிராக் இணை
Published on
Updated on
1 min read

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி பாா்ட்னா்ஷிப் 21-13, 21-15 என்ற நோ் கேம்களில் மலேசியாவின் லோ ஹாங் யீ/நிக் எங் சியோக் ஜோடியை 36 நிமிஷங்களில் வீழ்த்தியது.

ஆனால், 8-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ஹரிஹரன்/ரூபன்குமாா் இணை 21-15, 19-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் டோரி அய்ஸாவா/டாய்சுகே சானோ ஜோடியிடம் தோல்வியுற்றது.

மகளிா் இரட்டையா் முதல் சுற்றில், பிரியா கொங்ஜெங்பம்/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 21-15, 16-21, 21-17 என்ற வகையில் சீன தைபேவின் ஜி லிங் ஹுவாங்/வாங் ஸு மின் இணையை 1 மணி நேரம், 9 நிமிஷங்கள் போராடி வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

எனினும், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-16, 20-22, 15-21 என்ற கேம்களில், சீன தைபேவின் லின் ஜியாவ் மின்/பெங் யு வெய் கூட்டணியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

அதேபோல், அபூா்வா கலாவத்/சாக்ஷி கலாவத் கூட்டணி 8-21, 11-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் கோ பெய் கீ/டியோ மெய் ஜிங் இணையிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com