5 முதல்முறை சாம்பியன்களும் ஒரே திடலில்..! வித்தியாசமான சாதனை படைத்த மியூனிக் திடல்!

ஜெர்மனியில் உள்ள கால்பந்து திடலில் நிகழ்ந்த வித்தியாசமான சாதனை குறித்து...
Paris Saint-Germain and Inter Milan at the Allianz Arena in Munich, Germany.
அலையன்ஸ் அரினா திடல்படம்: ஏபி
Published on
Updated on
1 min read

முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை கோப்பை வெல்ல வேண்டுமா? அனைவரும் விரும்பும் ஒரு ராசியான திடலாக ஜெர்மனியின் மியூனிக்கில் இருக்கும் கால்பந்து திடல் மாறியிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற அலையன்ஸ் அரினா திடலில் இன்று சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 5-0 என இன்டர் மிலனை வீழ்த்தி பிஎஸ்ஜி அபார முதல்முறையாக கோப்பை வென்றுள்ளது.

இந்தத் திடலில் முதல்முறையாக ஓர் அணி சாம்பியன்ஸ் லீக்கை வெல்லும் என்ற பட்டியலில் பிஎஸ்ஜி 5-ஆவது அணியாக இடம் பிடித்துள்ளது.

ஒரு அணி சாதனை படைத்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு திடலே புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக எந்தெந்த அணிகள் எல்லாம் மியூனிக்கில் வென்றன?

1. நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் - 1979

2. மார்செய் - 1993

3. பொருஸியா டார்ட்மண்ட் - 1997

4. செல்ஸி - 2012

5. பிஎஸ்ஜி - 2025

பிஎஸ்ஜி அணியில் நெய்மர், மெஸ்ஸி, எம்பாபே இருந்தும் வெல்ல முடியாத கோப்பையை இளம் வீரர்கள் வென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com