
பிஎஸ்ஜி அணி பயிற்சியாளரின் மகளுக்காக அந்த அணியின் ரசிகர்கள் மிகப்பெரிய போஸ்டரை அஞ்சலியாக செலுத்தியது உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த லூயிஸ் ஹென்ரிக் (55) மகள் ஸனா தனது 9-ஆவது வயதில் 2019-ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார்.
அந்தக் குழந்தை உயிருடன் இருக்கும்போது 2015-இல் பார்சிலோனா அணி லூயிஸ் ஹென்ரிக் தலைமையில் சாம்பியன்ஸ் லீக்கை வென்றது.
அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஸனா பார்சிலோனா கொடியை தந்தையுடன் சேர்ந்து நடும் புகைப்படங்கள் வைரலாகியது.
பிஎஸ்ஜி ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல்
இந்நிலையில், பிஎஸ்ஜி ரசிகர்கள் அதேமாதிரி ஸ்னா தனது தந்தை லூயிஸ் ஹென்ரிக் உடன் பிஎஸ்ஜி கொடியை நடுவது போல் போஸ்டரை அடித்து திடலுக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.
ரசிகர்களின் கணிப்பு படியே பிஎஸ்ஜி 5-0 என அபார வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் லீக் கோப்பையை வென்றது.
திடலில் தனது மகளின் போஸ்டரைப் பார்த்ததும் லூயிஸ் ஹென்ரிக் கண்ணீர் மழ்க புன்னகைத்தார்.
”எனது மகள் எங்களுடன் 9 அற்புதமான ஆண்டுகள் வாழ்ந்தார். அவளுடன் எங்களுக்கு ஆயிரம் நினைவுகள் இருக்கின்றன. அதற்காக நான் மிகவும் அதிர்ஷடசாலி என நினைக்கிறேன். அவள்தான் என்னை வழிநடத்துகிறாள்” என 2024 ஆவணப் படத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்குப் பிறகு லூயிஸ் ஹென்ரிக், “அவள் உடல் ரீதியாக என்னுடன் இல்லாமல் இருந்தாலும் ஆன்மிக ரீதியாக எப்போதும் என்னுடனே இருக்கிறார்.
ரசிகர்களின் செயல்கள் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் எப்போதும் எனது மகளையே நினைத்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
11 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளையும் இவர் தலைமையில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.