வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!

கிளாசிக்கல் செஸ் போட்டியில் தமிழக வீரரிடம் தோல்வியுற்றது குறித்து கார்ல்சென் பேசியதாவது...
Magnus Carlsen. (pic.Norway Chess / Michal Walusza)
மேக்னஸ் கார்ல்சென்.Norway Chess / Michal Walusza
Published on
Updated on
1 min read

உலகின் நம்பர். 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் தமிழக வீரர் குகேஷுடம் தோல்விற்றது வலி மிகுந்தது எனக் கூறியுள்ளார்.

நாா்வே செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ் (19), உலகின் நம்பா் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை (34) வீழ்த்தினார். கிளாசிக்கல் கேமில் அவர் காா்ல்செனை முதல் முறையாக வென்றுள்ளார்.

இந்தப் போட்டியின் முதல் சுற்றில் கார்ல்செனிடம் தோல்வி கண்ட குகேஷ், அதற்கு தற்போது ரிவா்ஸ் ஆட்டத்தில் பதிலடி கொடுத்திருக்கிறாா்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் காா்ல்செனின் கையே ஓங்கியிருந்தது. வெற்றியின் விளிம்பிலிருந்த கார்ல்சென், எதிா்பாராத வகையில் ஒரு தவறான நகர்வை மேற்கொண்டார். அதைப் பயன்படுத்தி குகேஷ் வென்றார்.

பின்னர், டேபிளை ஒரு குத்து குத்திவிட்டு குகேஷிடம் கைகுலுக்கிச் சென்றார். பின்னர், போகும்போது குகேஷை முதுகில் பாராட்டும்படி தட்டிச் சென்றார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு கார்ல்சென் கூறியதாவது:

குகேஷ் சிறப்பாக விளையாடினார்

இளம் வயதில் ஆற்றல், போராடும் குணங்கள், நேர்மறை சிந்தனைகள் என அனைத்தும் அதிகமாக இருந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன். இவைகள் உங்களது தரமான நகர்வுகளை விடவும் மிகப்பெரியதாக இருக்கும்.

நீண்ட நாள்களாகவே குகேஷ் கண்மூடித்தனமான நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். சாதாரண நாள்களில் நான் வெற்றி பெற்றுள்ளேன். முன்பைவிட இப்போது அவருக்கு புரிதல்கள் மேம்பட்டிருக்கின்றன.

குகேஷ் சிறப்பாக விளையாடினார். மிகச் சிறப்பாகப் போராடினார். வாய்ப்பினை பயன்படுத்தினார். அதனால் அவரைப் பாராட்ட வேண்டும். நான் அந்தமாதிரியான வாய்ப்புகளை கொடுத்திருக்கக் கூடாது.

இனிமேல் கிளாசிக்கல் கேம் விளையாடமாட்டேன்

அடுத்தமுறை கிளாசிக்கல் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பேன். எனக்கு, இந்தக் கிளாசிக்கல் போட்டிகள் பிடிக்கவில்லை.

இனிமேல் எப்போதுமே விளையாடவில்லை எனக் கூறவில்லை. ஆனால், இப்போது பிடிக்கவில்லை.

எந்தப் போட்டியிலும் தோற்பது வலி மிகுந்தது. பிளிட்ஸ், ரேபிட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் தோற்றால்கூட பரவாயில்லை என நினைக்கிறேன்.

நேற்று குகேஷுடன் ஏன் அப்படி ஒரு நகர்வை மேற்கொண்டேன் எனத் தெரியவில்லை. ஆனாலும், கடைசி 3 போட்டிகளில் எனது சிறந்தவற்றைக் கொடுத்துள்ளேன்.

டாப் வீரராக மிகவும் வலி மிகுந்ததென நினைக்கிறேன். இந்தத் தொடர் சற்று வித்தியாசமாக நடந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com