
முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 48 அணிகள் தேர்வாக இருக்கின்றன. இதுவரை 10 அணிகள் தேர்வாகியுள்ளன.
இந்தமுறை முதல்முறையாக உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜோர்டான் ஓமனுடன் மோதிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
உஸ்பெகிஸ்தான் அணி ஐக்கிய அரபுடன் மோதியதில் 0-0 என கோல்கள் அடிக்காமலே முடிவுக்கு வந்தன.
ஏஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) சார்பாக இதில் மொத்தம் 47 அணிகள் இருக்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தேர்வாகும்.
தற்போதைக்கு இதிலிருந்து ஜப்பான், ஜோர்டான், கொரியா ரிபப்ளிக், ஈரான், உஸ்பெகிஸ்தான் என 5 அணிகள் உறுதியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.