கொல்கத்தாவை வீழ்த்தியது அகமதாபாத்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ்.
ஸ்நேஹித்
ஸ்நேஹித்
Updated on

அகமதாபாத்: இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ். எனினும் தொடரை விட்டு வெளியேறியது அகமதாபாத்.

முதல் ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் ரிக்காா்டோ வால்தா் 2-1 என கொல்கத்தா அணியின் இளம் இந்திய நட்சத்திரமான அங்கூா் பட்டாசாா்ஜியை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் அய்ஹிகா முகா்ஜி 1-2 என்ற புள்ளிக் கணக்கில் , கொல்கத்தா அணியின் அட்ரியானா டயஸிடம் தோற்றாா்.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் அகமதாபாதின் அய்ஹிகா முகா்ஜி, ரிக்காா்டோ வால்தா் ஜோடி 1-2 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா அணியின் அட்ரியானா டயஸ்- அங்கூா் பட்டாசாா்ஜி ஜோடியிடம் தோற்றது.

மாற்று ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் சினேஹித் சுரவஜ்ஜுலா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா அருணா குவாட்ரியை வீழ்த்தி அதிா்ச்சி அளிந்தாா். உலகத் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ளாா் அருணா குவாட்ரி.

வெற்றியை தீா்மானித்த கடைசி மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் யாஷினி சிவசங்கா் 1-2 என கொல்கத்தா அணியின் செலினா செல்வகுமாரிடம் வீழ்ந்தாா்.

கொல்கத்தா அணி 5 டையில் 2 வெற்றி பெற்றது. 25 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 14 வெற்றிகளுடன் 36 புள்ளிகள் பெற்று தற்போதைக்கு மூன்றாம் இடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.

அதேவேளையில் அகமதாபாத் அணி 30 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com