ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: தோனிக்கு கௌரவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) "ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டு கெüரவிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: தோனிக்கு கௌரவம்
Published on
Updated on
1 min read

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) "ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டு கெüரவிக்கப்பட்டுள்ளார்.

தோனியுடன், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் மற்றும் ஹசிம் ஆம்லா, நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகிய கிரிக்கெட் வீரர்களும், இங்கிலாந்தின் சாரா டெய்லர், பாகிஸ்தானின் சனா மிர் ஆகிய வீராங்கனைகளும் இந்த ஆண்டு அந்த கெüரவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தோனிக்கு இந்த கெüரவம் அளிக்கப்பட்டது தொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், "நெருக்கடியான தருணங்களில் நிதானமாக செயல்படுபவர், ஆட்டக் களத்தில் நுட்பமாக களமாடுபவர், வெள்ளைப் பந்து தொடர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என கொண்டாடப்படுகிறார் தோனி. சிறந்த ஃபினிஷர், விக்கெட் கீப்பர், கேப்டனாகத் திகழ்ந்த அவருக்கு இந்த "ஹால் ஆஃப் ஃபேம்' கெüரவம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவுக்காக 3 ஃபார்மட்டுகளிலுமாக 538 ஆட்டங்களில் 17,266 ரன்கள் சேர்த்ததுடன், விக்கெட் கீப்பராக 829 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.

இந்த எண்ணிக்கைகள் அவர் எத்தகைய சிறந்த வீரர் என்பதை மட்டும் விளக்கவில்லை. அவர் எவ்வாறு நிலைத்தன்மையுடன் செயல்பட்டார், உடற்தகுதியுடன் களத்தில் நீடித்தார் என்பதையும் காட்டுகிறது.

விக்கெட் கீப்பிங்கில் வித்தியாசமாகச் செயல்பட்ட தோனி, கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்வதிலும், தனது பாணியில் அற்புதமாக கேட்ச்களை பாய்ந்து பிடிப்பதிலும், அசத்தலாக ரன் அவுட் செய்வதிலும் வல்லவராக இருந்தார். அதேபோல், இந்திய விக்கெட் கீப்பர் - பேட்டர்கள் கவனமாக விளையாடி வந்த காலத்தில், அடித்து விளாசுபவராக தோனி களமாடினார். 2007 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை சாம்பியனாக்கியபோது, கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தோனி உருவெடுத்தார். 2011-இல் இந்தியாவை உலக சாம்பியனாக ஆக்கியது, அவர் கேரியரின் உச்சமாகும்' என்று கூறியுள்ளது.

இந்திய அணி பயணத்தில் தோனி...

ஃபார்மட் ஆட்டங்கள் ரன்கள் அதிகபட்சம் சராசரி 100 50 கேட்ச் ஸ்டம்பிங்

டெஸ்ட் 90 4,876 224 38.09 6 33 256 38

ஒருநாள் 350 10,773 183* 50.57 10 73 321 123

டி20 98 1,617 56 37.60 0 2 57 34

தோனி கேப்டன்சியில் இந்தியா...

2007 (அறிமுகம்)

2011 ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன்

2013 சாம்பியன்ஸ் கோப்பை சாம்பியன்

2010, 2016 ஆசிய கோப்பை சாம்பியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com