1930 - 2026: அனைத்து உலகக் கோப்பையிலும் தகுதிபெற்ற ஒரே அணியாக பிரேசில் சாதனை!

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...
Brazil is the only nation to qualify for every World Cup
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்கள். படம்: எக்ஸ் / ஃபிபா உலகக் கோப்பை.
Published on
Updated on
1 min read

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி அனைத்து உலகக் கோப்பையிலும் தகுதிபெற்ற ஒரே அணியாக வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பராகுவேயுடன் மோதிய பிரேசில் அணி 1-0 என வென்றது.

இந்தப் போட்டியில் 44-ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து அசத்தினார்.

கார்லோ அன்செலாட்டி தலைமையில் பிரேசில் அணி பெற்ற முதல்வெற்றி இதுவேயாகும். இத்துடன் 2026 உலகக் கோப்பைக்கும் தகுதிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் 73 சதவிகித பந்தினை பிரேசில் அணி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

பிரேசில் அணி 85 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்த அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பிரேசில் அணி 4 முறை இலக்கை நோக்கி அடித்தது. பராகுவே அணி இலக்கை நோக்கி 1 முறை மட்டுமே அடித்தது.

தென் அமெரிக்க தகுதிச் சுற்று புள்ளிப் பட்டியலில் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் பராகுவே 24 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் இருக்கிறது.

5 முறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணி அனைத்து உலகக் கோப்பையிலும் தகுதிபெற்றதுக்கு அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com