உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 282 ரன்களை நோக்கி விளையாடி வரும் அந்த அணிக்கு இன்னும் 69 ரன்களே தேவையாகும்.

தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியனாவதுடன், ஐசிசி போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வென்று வரலாறு படைக்கும்.

அந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய, தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் 69 ரன்களே தேவை எனும் நிலையில் அந்த அணியின் வசம் 8 விக்கெட்டுகளும், முழுமையாக 2 நாள்களும் உள்ளன.

முன்னதாக, கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ûஸ விளையாடிய ஆஸ்திரேலியா, ககிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்செனின் வேகப்பந்துவீச்சில் 212 ரன்களுக்கே சுருண்டது. பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்த உதவினர். ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது வேகப்பந்து வீச்சால் திணறடித்தார். அவர் 6 விக்கெட்டுகள் சாய்க்க, தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. டேவிட் பெடிங்கம் 45, கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் அடித்தது ஸ்கோருக்கு பங்களித்தனர்.

ஸ்டார்க் கொடுத்த "ஷாக்': பின்னர், 74 ரன்கள் முன்னிலையுடன் 2}ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 2}ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. 3}ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை, மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன் தொடர்ந்தனர்.

இதில் ஸ்டார்க், தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அரைசதம் கடக்க, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200}ஐ கடந்தது. மறுபுறம் நேதன் லயன் 2, ஜோஷ் ஹேஸில்வுட் 17 ரன்களுக்கு வெளியேற, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

ஸ்டார்க் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க பெüலர்களில் ரபாடா 4, லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

வெற்றியை நோக்கி: இறுதியில், 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2}ஆவது இன்னிங்ûஸ விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், ரயான் ரிக்கெல்டன் 6, வியான் முல்டர் 5 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களுக்கு ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்தனர்.

தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா கூட்டணி, நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பியது.

இதில் மார்க்ரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3}ஆவது சதத்தை பதிவு செய்தார். நாளின் முடிவில் மார்க்ரம் 102, பவுமா 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com