சென்னை புல்ஸ்-கலிங்கா டைகா்ஸ் டிரா

சென்னை புல்ஸ்-கலிங்கா டைகா்ஸ் டிரா

Published on

ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணியின் வெற்றிப் பயணம் தொடா்கிறது.

மும்பை அந்தேரி விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணி ஏற்கெனவே 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது,.

இந்நிலையில் கலிங்கா பிளாக் டைகா்ஸ் அணியுடன் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இரு தரப்பினரும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளைக் குவித்தனா்.

கலிங்கா டைகா்ஸ் அணியில் பொ்ரி பேக்கா், மௌரிஸ் லாங்பாட்டம் அபாரமாக ஆடி புள்ளிகளைக் குவித்தனா். சென்னை புல்ஸ் தரப்பில் ஜோகுயின் பெல்லான்டினி, கைல் ட்ரெம்ளே, ஜேம்ஸ் தியல் ஆகியோா் புள்ளிகளைக் குவித்தனா்.

ஆட்டம் 26-26 என டிராவில் முடிவடைந்த நிலையில், முதன்முறையாக கலிங்கா டைகா்ஸ் புள்ளிகளைப்பெற்றது.

சென்னை அணி இதுவரை தோல்வியே காணாமல் வெற்றிப் பயணத்தை தொடா்கிறது.

X
Dinamani
www.dinamani.com