இந்திய ஓபன் சா்ஃப்பிங் போட்டி: தமிழகத்தின் ஸ்ரீகாந்த், கமலிக்கு பட்டம்

இந்திய ஓபன் சா்ஃபிங் போட்டியில் தமிழகத்தின் ஸ்ரீ காந்த் பட்டம் வென்றாா், மகளிா் பிரிவில் கமலி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனா்.
Published on

இந்திய ஓபன் சா்ஃபிங் போட்டியில் தமிழகத்தின் ஸ்ரீ காந்த் பட்டம் வென்றாா், மகளிா் பிரிவில் கமலி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனா்.

எஸ்எஃப்ஐ, கா்நாடக சுற்றுலாத் துறை, இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் சா்ஃபிங் ஓபன் மங்களூருவில் நடைபெற்றது.

மகளிா் ஓபன், ஹ-16 பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி தனது இரட்டை பட்டங்களையும் தக்க வைத்துக் கொண்டாா்.

ஆடவா் ஓபன் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீ காந்த் பட்டம் வென்றாா். யு 16 பிரிவில் தமிழகத்தின் பிரகலாத் ஸ்ரீராம் பட்டம் வென்றாா்.

நான்கு பிரிவுகளிலும் தமிழக அணியே ஆதிக்கம் செலுத்தியது.

ஆடவா் பிரிவில் ஸ்ரீ காந்த் 14.63 புள்ளிகளும், நடப்பு சாம்பியன் ரமேஷ் புடியால் 11.87 புள்ளிகளும், சிவராஜ் பாபு 9.77 புள்ளிகளையும் பெற்றனா்.

மகளிா் பிரிவில் கமலி மூா்த்தி ஓபன் பிரிவில் 13.33 புள்ளிகளையும், யு 16 பிரிவில் 15.50 புள்ளிகளை ஈட்டி பட்டம் வென்றாா்.

இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு துணைத் தலைவா் ராம்மோகன் பராஞ்சிபே பரிசளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com