1,250 கோல் பங்களிப்பு..! உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை!

உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி நிகழ்த்திய பல சாதனைகள் குறித்து...
Inter Miami's Lionel Messi walks onto the field for the Club World Cup group A soccer match between Inter Miami and FC Porto in Atlanta
கால்பந்து திடலுக்கு நடந்துச் செல்லும் லியோனல் மெஸ்ஸி. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி 1,250 கோல்கள் அடித்ததில் பங்குபெற்றுள்ள முதல் வீரராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கிளப் உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி 866 கோல்கள், 384 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

மொத்தமாக (Goal Contribution) கோல் பங்களிப்பில் 1,250 முறை இருந்துள்ளார்.

இதுவரை யாரும் இந்த மைல்கல்லை நெருங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதாகும் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா அணிக்காக 2022-இல் உலகக் கோப்பையை வென்று தந்தார்.

கடந்த சீசனில் இன்டர் மியாமி அணியை முதல்முறையாக சப்போர்டர்ஸ் ஷீல்டு பதக்கம் வெல்ல காரணமாக இருந்தார்.

இன்டர் மியாமி அணியின் கேப்டனாக இருக்கும் மெஸ்ஸி இன்றைய கிளப் உலகக் கோப்பையில் அசத்தலான ஃப்ரி கிக்கில் கோல் அடித்தார்.

ஃப்ரி கிக்கிலும் சாதனை

ஃப்ரி கிக்கில் கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 68 கோல்களுடன் 3-ஆவது இடத்தில் உள்ளார்.

முதலிடத்தில் 77 கோல்களுடன் பிரேசிலின் ஜூனின்ஹோ பெர்னாம்புகானோ இருக்கிறார்.

ரொனால்டோ 937 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தாலும் கோல் பங்களிப்பில் (1,195) மெஸ்ஸியை (1,250) விட பின் தங்கியே இருக்கிறார்.

ஃபிபா தொடர்களில் அதிக கோல்கள்

இதுவரை நடந்த ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி 25 கோல்கள் அடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்:

1. லியோனல் மெஸ்ஸி - 25 (ஆர்ஜென்டீனா)

2. ரொனால்டிங்கோ - 19 (பிரேசில்)

3. ரொனால்டோ - 19 (பிரேசில்)

4. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 17 (போர்ச்சுகல்)

5. லூயிஸ் சௌரேஸ் - 17 (உருகுவே)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com