அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி..! தாய் நெகிழ்ச்சி!

இளம் ரசிகரின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் நெகிழ்ச்சியான செயல் குறித்து...
Messi fulfills dream of boy suffering from rare disease. (photos from hopewithhulda)
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி.படங்கள்: இன்ஸ்டா / ஹோப்வித்ஹுல்டா.
Published on
Updated on
1 min read

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் செயலால் கால்பந்து உலகம் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி குரூப் ஏ பிரிவில் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு டிரா செய்தாலே போதுமானது அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுவிடும்.

மெஸ்ஸி எப்போதும் ரசிகர்களை மதிப்பவராக இருக்கிறார். ரசிகர்கள் அவர்களது ஜெர்ஸியில் கையெழுத்துக் கேட்டால் தவறாமல் செய்துவிடுவார்.

போர்டோ உடனான போட்டிக்கு முன்பு மெஸ்ஸி திடலை நோக்கிச் செல்லும்போது ஒரு சிறுவன் வீல் சேரில் உட்கார்ந்து ஆர்ஜென்டீனா ஜெர்ஸி அணிந்து மெஸ்ஸி மெஸ்ஸி என கத்திக்கொண்டு இருந்தான்.

அதைப் பார்த்த மெஸ்ஸி அவரிடம் வந்து கையெழுத்து போட்டுச் செல்வார். அந்தச் சிறுவன் கட்டியணைக்க கேட்டதும் மெஸ்ஸியும் அதைச் செய்வார்.

இந்த நிகழ்வுகளை விடியோ எடுத்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் தாயார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவினையும் எழுதியுள்ளார்.

5 வயதிலிருந்தே அந்தச் சிறுவன் கால்பந்து ரசிகனாக இருந்ததகாவும் மெஸ்ஸியைக் காண்பதே அவனது கனவாக இருந்ததாகவும் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

மெஸ்ஸி செய்ததை எங்களால் வாழ்வில் மறக்க முடியாதென்றும் அந்தப் போட்டியில் மெஸ்ஸி அடித்த ஃபிரீ கிக் குறித்தும் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com