
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீண்டும் தனது சிறுவயது கிளப்பான சன்டோஷில் நீடிப்பதாகக் கூறியுள்ளார்.
33 வயதாகும் நெய்மர் பார்சிலோனா அணியில் மெஸ்ஸியுடன் விளையாடி கவனம் ஈர்த்தார். பின்னர், பிஎஸ்ஜி அணியில் விளையாடினார்.
கடைசியாக சௌதி லீக்கில் விளையாடிய அவர் காயம் காரணமாக 90 சதவிகித போட்டிகளில் பங்கேற்காதது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களில் முதலிடம் பிடித்துள்ள நெய்மர், ஏசிஎல் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
சிறுவயது அணிக்கு உதவும் நெய்மர்
2026 உலகக் கோப்பையில் விளையாட நெய்மர் உடல்தகுதியைப் பெற வேண்டும். அதற்காக, இந்தாண்டு முடியும்வரை சன்டோஷ் கிளப்பில் இருப்பதாக முடிவெடுத்துள்ளார்.
நெய்மர் இந்த கிளப்பில் இணைந்தபிறகு அதன் வருவாய் கணிசமாக உயர்ந்திருக்கிறது. மேலும், சமூக வலைதளத்திலும் வரலாற்று உயர்வை கண்டுள்ளதாக அந்த கிளப் தெரிவித்துள்ளது.
நெய்மரை வைத்தே 80 சதவிகித விளம்பரதாரர்களை அந்த கிளப் ஒப்பந்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பீலேவுக்குப் பிறகு பிரேசில் மக்களால் அதிகம் கொண்டாடப்படும் கால்பந்து வீரராக நெய்மர் இருக்கிறார்.
சாம்பியன் லீக்கில் விளையாடுவாரா?
மீண்டும் ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளில் நெய்மர் விளையாடுவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த முடிவையே எடுத்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பாக நெய்மர் இண்டர் மியாமி அணியில் மெஸ்சியுடன் இணைந்து விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இப்படி பல அணிகள் நெய்மரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்த 6 மாதத்திற்குப் பிறகு நெய்மர் என்ன முடிவு எடுப்பார் எனத் தெரியவில்லை.
அடுத்தாண்டு ஜூனில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் 6 மாதம் இடைவெளி இருக்கும். அப்போது நெய்மர் எந்த கிளப்பில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுவரை காயம் ஏற்படாமல் இருந்தாலே பெரிய விஷயம் எனவும் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
summary
Brazilian footballer Neymar has said he will stay at his boyhood club, Santos, again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.