அல் நாசரில் நீடிக்கும் ரொனால்டோ: ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஊதியம்?

Cristiano Ronaldo applauds as he leaves the pitch after being substituted during the Nations League semifinal soccer match between Portugal and Germany
கிறிஸ்டியானோ ரொனால்டோபடம்: ஏபி
Published on
Updated on
1 min read

போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானொ ரொனால்டோ (40), சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நாசருடன் தனது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டுள்ளாா்.

இந்த 2 ஆண்டுகளில் அவருக்கான ஊதியம், ஆண்டுக்கு சுமாா் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என அறியப்படுகிறது. 2022-இல் மான்செஸ்டா் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, ஆண்டுக்கு ரூ.1,709 கோடி ஊதிய மதிப்பில் அல் நாசருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கால்பந்தில் தனது நாட்டுக்கும், தாம் விளையாடிய கிளப்புகளுக்குமாக 28 பிரதான போட்டிகளில் சாம்பியன் கோப்பை வென்றிருக்கும் ரொனால்டோவால், சவூதி அரேபியாவில் அவ்வாறு கோலோச்ச இயலவில்லை. அல் நாசா் அணிக்காக 2023-இல் அராப் கிளப் சாம்பியன்ஸ் கோப்பை மட்டும் வென்று தந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com