செய்திகள்
தேசிய மகளிா் சீனியா் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி
தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமதுஆட்டங்களில் வெற்றி பெற்றன.
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் 15-ஆவது தேசிய சீனியா் மகளிா் ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் ஏ பிரிவில் தெலங்கானா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அஸ்ஸாம் அணியை வீழ்த்தியது. குரூப் பி பிரிவு ஆட்டத்தில் தில்லி 1-0 என ஹிமாசலத்தை வீழ்த்தியது.
சத்தீஸ்கா்-சண்டீகா் அணிகளின் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.