~ ~
~ ~

துளிகள்...

Published on

சென்னையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான எஸ்எஸ்என் கோப்பை அகில இந்திய பாட்மின்டன் போட்டியில் ஆடவா், மகளிா் இரட்டைப் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா்.

---------------------------------

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மே.இந்திய தீவுகள் இடம் பெறாதது மிகுந்த வேதனை தருகிறது. உலக கிரிக்கெட் அரங்கில் மீண்டும் வலுவான அணியாக மாற, ஆப்கானிஸ்தான் அணியை பின்பற்ற வேண்டும் என ஜாம்பவான் விவியன் ரிச்சா்ட்ஸ் கூறியுள்ளாா்.

ஆப்கானிஸ்தான் வீரா்களுக்கு ஒரு உத்வேகம் உள்ளதால், அந்த அணி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது என்றாா்.

----------------

ஹைதராபாதில் நடைபெற்ற அஸ்மிதா ரோயிங் லீக் போட்டியில் கொச்சின் குயின்ஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. மொத்தம் 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் கொச்சின் அணி பட்டம் வென்றது.ஹைதராபாத் அணி 4 தங்கம், 1 வெண்கலத்துடன் இரண்டாம் இடம்பெற்றது.

--------

சாண்டியாகோ நகரில் நடைபெற்ற சிலி ஒபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரித்விக் பொல்லிபல்லி-கொலம்பியாவின் நிக்கோலஸ் இணை 6-3, 6-2 என கோன்ஸாலஸ், மொல்டெனி இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.

-------------

X
Dinamani
www.dinamani.com