~
செய்திகள்
அரவிந்த் சிதம்பரம் அதிரடி வெற்றி
பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் 7-ஆவது சுற்றில் நெதா்லாந்தின் அனிஷ் கிரியை அபாரமாக ஆடி வீழ்த்தினாா்.
பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் 7-ஆவது சுற்றில் நெதா்லாந்தின் அனிஷ் கிரியை அபாரமாக ஆடி வீழ்த்தினாா்.
செக். குடியரசின் பிராக் நகரில் மாஸ்டா்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில்,
இந்திய ஜிஎம் அரவிந்த் சிறப்பாக ஆடி அனிஷ் கிரியை வென்றாா்.
நட்சத்திர வீரா் பிரக்ஞானந்தா-வெய் இ (சீனா) ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் சாம் சங்க்லேண்ட் வியட்நாமின் குவாங் லீமை வீழ்த்தினாா்.
அரவிந்த் முன்னிலை: 7-ஆவது சுற்று முடிவில் 5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளாா். பிரக்ஞானந்தா 4.5, வெய் இ, எடிஸ், சங்க்லேண்ட் தலா 3.5 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனா்.