
இந்திய கால்பந்தின் மோசமான நிலைமையைக் குறிப்பதாக சுனில் சேத்ரியின் வருகையை லெஜண்டரி கால்பந்து வீரர் ஐஎம் விஜயன் விமர்சித்துள்ளார்.
இந்திய கால்பந்தின் லெஜண்ட் சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவிருக்கிறார்.
ஐஎஸ்எல் தொடரில் சிறப்பாக விளையாடிய சுனில் சேத்ரி இந்த முடிவினை எடுத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் இந்திய அணி வங்கதெசத்தை வரும் மார்ச்.25இல் எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் நடிகரும் முன்னாள் கால்பந்து வீரருமான ஐஎம் விஜயன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மோசமான நிலையில் இந்திய கால்பந்து
அணியின் பார்வையில் இருந்து பார்த்தால் இது நல்ல முடிவாக இருக்கும். 40 வயதாகும் ஒருவரை தேசிய அணிக்கு விளையாட வைப்பது குறித்து என்னைக் கேட்டால் அது நல்லதல்ல என்பேன். இதுமாதிரி கடந்த காலங்களிலும் நடந்துள்ளது.
நல்ல ஸ்டிரைக்கராக தேடிக்கொண்டுள்ளோம். ஆனால், துரதிஷ்டவசமாக நமக்கு யாரும் இதுவரை கிடைக்கவில்லை. ஐஎஸ்எல் தொடரில் டாப் ஸ்டிரைக்கர்கள் எல்லாம் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் சுனில் சேத்ரியை மீண்டும் விளையாட வைக்கிறோம் என்றார்.
ஐஎஸ்எல் தொடரில் சுனில் சேத்ரி 23 போட்டிகளில் 12 கோல்கள் அடித்துள்ளார். இந்த சீசனில் இந்தியர்களில் இவர்தான் அதிக கோல்கள் அடித்துள்ளார்.
சர்வதேச அளவில் மெஸ்ஸி, ரொனால்டாவுக்கு பிறகு 3ஆவது நபராக தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்தவராக சுனில் சேத்ரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.