
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இளம் வீரர் (17) லாமின் யமல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வென்றது.
இந்தப் போட்டியில் ரபீனியா 11, 42ஆவது நிமிஷங்களில் 2 கோல்கள் அடித்தார். அதில் முதல் கோல் அடிக்க உதவியது லாமின் யமல்.
27ஆவது நிமிஷத்தில் லாமின் யமல் அற்புதமான ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மிக குறைந்த வயதில் கோல் அடித்தது, கோல் அடிக்க உதவியது (அசிஸ்ட்) என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
17 வயது 241 நாள்கள் ஆகும் லாமின் யமல் இந்தத் தொடரில் மட்டும் 3 கோல்கள் அடித்துள்ளார்.
நோன்பிருந்தும் இவ்வளவு சிறப்பாக விளையாடிய இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பயிற்சியின்போது மற்ற வீரர்கள் தண்ணீர் குடிக்கும்போது தனியாக பயிற்சி செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்தாண்டு சிறப்பாக விளையாடிவரும் லாமின் யமலை விடவும் குறைந்த வயதில் ஒரு பார்சிலோனா வீரர் சாம்பியன் லீக்கில் கோல் அடித்துள்ளார்.
17ஆண்டுகள் 40 நாள்களில் அன்சு ஃபடி என்ற பார்சிலோனா வீரர் 2019இல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அவருமே ஒரே போட்டியில் கோல், அசிஸ்ட் செய்ய அதிக நாள்கள் தேவைப்பட்டன.
17 ஆண்டுகள் 241 நாள்கள்: லாமின் யமல் (2025)
17 ஆண்டுகள் 263 நாள்கள் : ப்ரீல் எம்போலோ (2014)
17 ஆண்டுகள் 355 நாள்கள்: அன்சு ஃபடி (2020)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.