
நேஷ்னல் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகலை வீழ்த்தி டென்மார்க் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ரொனால்டோவுக்கு எதிராக அவரது பாணியில் கொண்டாடிய டென்மார்க் வீரரின் விடியோ வைரலாகி வருகிறது.
நேஷ்னல் லீக் காலிறுதி லெக் 1 போட்டியில் டென்மார்க் 1-0 என போர்ச்சுகலை வென்றது. இதில் 78ஆவது நிமிஷத்தில் ராஸ்மஸ் ஹோஜ்லன்ட் கோல் அடித்து அசத்தினார்.
இந்த கோல் அடித்த பிறகு ரொனால்டோவுக்கு எதிராக அவரது பாணியில் ’ஸ்யூ’ எனக் கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது.
ராஸ்மஸ் ஹோஜ்லன்ட் இது குறித்து பேசும்போது, “நான் எனது விருப்பமான ஒருவரை எப்படி கிண்டல் செய்ய முடியும்.
நான் 2011இல் இருந்து ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகன். அந்த அணிக்கு எதிராக கோல் அடித்தது மிகப்பெரிய விஷயம்” என்றார்.
இது டென்மார்க் அணிக்காக அவரது இந்த சீசனில் 7ஆவது கோல் ஆகும். மான்செஸ்டர் சிட்டியில் 8 கோல்கள் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.