
பிலிப்பின்ஸ்ஸின் இளம் (19) வீராங்கனை மியாமி ஓபன் ஒற்றையர் மகளிர் காலிறுதியில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிலிப்பின்ஸ்ஸின் இளம் (19) வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா போட்டித் தரவரிசையில் 2ஆம் இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக்கை 6-2, 7-5 என வென்று அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.
19 வயதாகும் எலா வைல்டு கார்டு மூலம் டபிள்யூடிஏ 1000 இல் கலந்துகொண்டார். 140ஆவது தரவரிசையில் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு முன்னாள் கிராண்ட்ஸ்லாம் வீராங்கனைகளை வீழ்த்தி வருகிறார்.
தொடர்ச்சியாக மூன்று சுற்றுகளிலும் கிராண்ட்ஸ்லாம் வீராங்கனைகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.
1 மணி நேரம் 37 நிமிஷங்கள் நடந்த இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் தனது முதல் டபிள்யூடிஏ அரையிறுதியில் எலா நுழைந்துள்ளார்.
மியாமி தொடருக்கு முன்பாக டாப்-40க்குள் யாரையும் எலா வென்றதில்லை. ஆனல், இங்கு டாப்-10இல் இருந்த மூவரை வென்று அசத்தியுள்ளார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் பெகுலாவை எலா சந்திக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.