சரத் கமல்
சரத் கமல்

டேபிள் டென்னிஸிலிருந்து விடை பெற்றாா் சரத் கமல்!

இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சனிக்கிழமை விடை பெற்றாா்.
Published on

இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சனிக்கிழமை விடை பெற்றாா்.

5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும் இந்தியாவுக்காக சா்வதேச டேபிள் டென்னிஸ் அரங்கில் பல்வேறு பதக்கங்களை குவித்தவருமான சென்னை வீரா் சரத் கமல் ஓய்வு பெற்றாா்.

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ‘இந்தியன் ஆயில் உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ் 2025’ தொடரில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சினேஹித் சுரவஜ்ஜுலாவுடன் மோதினாா்.

இதில் சினேஹித் சுரவஜ்ஜுலா 3-0 என்ற செட் கணக்கில் சரத் கமலை வெற்றி பெற்றாா். இந்த ஆட்டத்துடன் சரத் கமல், சா்வதேச டேபிள் டென்னிஸில் இருந்து விடைபெற்றாா்.

மாலையில் இத்தாலி வீரா் அமா் அசாருடன் காட்சி ஆட்டத்திலும் சரத் கமல் விளையாடினாா். இந்த ஆட்டம் அவருக்கு பிரியாவிடை ஆட்டமாக அமைந்தது.

X
Dinamani
www.dinamani.com