தாமஸ் முல்லரின் கடைசி போட்டி: பீர், கோப்பையுடன் கொண்டாடிய பெயர்ன் மியூனிக்!

தாமஸ் முல்லரின் கடைசி போட்டியை பெயர்ன் மியூனிக் அணியினர் கொண்டாடியது குறித்து...
வெற்றிக் களிப்பில் தாமஸ் முல்லர், பெயர்ன் மியூனிக் அணியினர்.
வெற்றிக் களிப்பில் தாமஸ் முல்லர், பெயர்ன் மியூனிக் அணியினர்.படங்கள்: எக்ஸ் / பெயர்ன் மியூனிக்
Published on
Updated on
1 min read

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 25 ஆண்டுகளாக விளையாடிவரும் தாமஸ் முல்லர் இந்த சீசனோடு அணியை விட்டு பிரிகிறார்.

35 வயதாகும் தாமஸ் முல்லர் பெயர்ன் மியூனிக் அணிக்காக 750 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த அணிக்காக ஒருவர் அதிகமான போட்டிகளில் விளையாடியதில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், நேற்றுடன் (மே.10) சொந்த மண்ணில் இந்த சீசனின் கடைசி போட்டியை பெயர்ன் மியூனிக் விளையாடியது. இந்தப் போட்டியில் 2-0 என வென்றது.

போட்டி முடிந்தபிறகு கோப்பையை தாமஸ் முல்லரிடம் கொடுத்து கொண்டாடினார்.

போட்டிக்கு பின்னர் பெயர்ன் மியூனிக் அணியினர் பீரை ஒவ்வொருவர் மீதும் ஊற்றி கோலகலமாகக் கொண்டாடினர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் தனது 15 ஆண்டுகால சாபத்தை முறியடித்து முதல்முறையாக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

பெயர் மியூனிக் அணிக்கு இது 34-ஆவது புன்டெஸ்லீகா கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த அணியை ஜெர்மனி ஜெயண்ட்ஸ் என ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

இந்த சீசனில் மீதமுள்ள ஒரு போட்டியில் பெயர்ன் மியூனிக் அணி மே.17ஆம் தேதி ஹோஃபென்ஹெய்ம் உடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com