மெஸ்ஸி மேஜிக்..! இன்டர் மியாமி அபார வெற்றி!

இன்டர் மியாமி அணி வீரர் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
லியோனல் மெஸ்ஸி.
லியோனல் மெஸ்ஸி. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இன்டர் மியாமி அணி வீரர் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்து தொடரில் இண்டர் மியாமி அணியும் மொன்ட்ரியால் அணியும் இன்று காலை சேஸ் திடலில் மோதின.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-2 என வெற்றி பெற்றது. 54 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இன்டர் மியாமி அணி 86 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்தது.

இதில் மெஸ்ஸி 27, 87ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். அத்துடன் சௌரஸ் கோல் அடிக்க அசிஸ்ட்ஸ் செய்தும் உதவினார்.

சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

கடந்த சீசனில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக சப்போர்டர்ஸ் ஷீல்டு வாங்க முக்கிய காரணமாக இருந்த மெஸ்ஸி இந்த சீசனில் சுமாராக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

புள்ளிப் பட்டியலில் இன்டர் மியாமி அணி 26 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் இருக்க பிலடெல்பியா 33 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com