

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் ஜென் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி பரிசளித்து கௌரவப்படுத்தினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
உலகின் நான்காம் நிலை வீராங்கனையான 23 வயதான ஜேனிஸ் ஜென் உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் கிம்பெரில் பிர்ரெல்லை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் களம் கண்டார். இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிர்ரெல்லை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளார் ஜேனிஸ் ஜென்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.