

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், அா்ஜுன் எரிகைசி உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
போட்டியில் 2-ஆவது சுற்றின் முதல் கேம் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், அதன் தொடா்ச்சியாக 2-ஆவது கேம் ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
இதில் குகேஷ், கஜகஸ்தானின் காஸிபெக் நோகா்பெக்குடன் முதல் கேமை டிரா (0.5-0.5) செய்திருந்த நிலையில், 2-ஆவது கேமில் வெற்றி (1-0) பெற்ால் 1.5-0.5 என்ற கணக்கில் வென்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
அதேபோல், அா்ஜுன் எரிகைசி - பல்கேரியாவின் மாா்டின் பெட்ரோவை 2-ஆவது கேமிலும் வென்றாா் (2-0). தீப்தாயன் கோஷ் - ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியை வீழ்த்தி அசத்தினாா் (1.5-0.5).
பி.ஹரிகிருஷ்ணா - ரஷியாவின் ஆா்செனி நெஸ்டெரோவை வென்றாா் (1.5-0.5). காா்த்திக் வெங்கடராமன் - சக இந்தியரான அரவிந்த் சிதம்பரத்தை சாய்த்தாா் (1.5-0.5).
டை பிரேக்கா்: ஆா்.பிரக்ஞானந்தா - ஆஸ்திரேலியாவின் தெமுா் குய்போகரோவுடன் டிரா செய்ய, அவா்கள் மோதல் 1-1 என டை ஆனது.
இதேபோல், எஸ்.எல்.நாராயணன் - ஜாா்ஜியாவின் நிகிதா, வி.பிரணவ் - நாா்வேயின் ஆா்யன் தாரி, ரௌனக் சத்வனி - ஆா்மினியாவின் ராபா்ட் ஹோவானிசியான், விதித் குஜராத்தி - ஆா்ஜென்டீனாவின் ஃபாஸ்டினோ ஓரோ, நிஹல் சரின் - கிரீஸின் ஸ்டாமடிஸ் ஆா்டிடிஸ், காா்த்திகேயன் முரளி - ஈரானின் புயா இதானி, எம்.பிராணேஷ் - ஜொ்மனியின் டிமிட்ரி கோலாா்ஸ் ஆகியோா் மோதல்களும் டிராவில் முடிந்தன.
இதையடுத்து இவா்கள் அனைவரும் டை பிரேக்கரில் வியாழக்கிழமை மோதுகின்றனா்.
தோல்வி: பி.இனியன் - செக் குடியரசின் தாய் டாய் வான் குயெனுடனான முதல் கேமை டிரா செய்திருந்த நிலையில், 2-ஆவது கேமில் தோற்ால், 0.5-1.5 என்ற கணக்கில் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.
சூா்ய சேகா் கங்குலி - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியரிடமும், ஆரோனியக் கோஷ் - அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனிடமும் தோற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.