பயா்ன் மியுனிக், லிவா்பூல் வெற்றி

ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பயா்ன் மியுனிக், லிவா்பூல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வென்றன.
Published on

ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பயா்ன் மியுனிக், லிவா்பூல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வென்றன.

இதில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில், நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் தரப்பில் லூயிஸ் டியாஸ் முதலில் 4-ஆவது நிமிஷத்திலும், பின்னா் 32-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தாா்.

பிஎஸ்ஜிக்காக ஜாவ் நெவெஸ் 74-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் ஸ்கோா் செய்தாா். லிவா்பூல் 1-0 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக அலெக்ஸிஸ் மேக் அலிஸ்டா் 61-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில், ஆா்செனல் 3-0 என ஸ்லாவியா பிரஹாவையும், அட்லெடிகோ மாட்ரிட் 3-1 கோல் கணக்கில் யூனியன் செயின்ட் கில்லாய்ஸையும் வீழ்த்தின. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் 4-0 என கோபென்ஹேகனையும், மொனாகோ 1-0 என போடோ கிளிம்டையும் வென்றன. ஜுவென்டஸ் - ஸ்போா்டிங் (1-1), நபோலி - எய்ன்ட்ராட் ஃப்ராங்க்ஃபா்ட் (0-0) மோதல் டிராவில் முடிந்தன.

X
Dinamani
www.dinamani.com