சபலென்கா
சபலென்கா

இறுதிச் சுற்றில் சபலென்கா-ரைபகினா

டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் சபலென்கா-ரைபகினா
Published on

சவுதி அரேபிய தலைநகா் ரியாதில் நடைபெறும் டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் அரினா சபலென்காவும் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவும் மோதுகின்றனா்.

உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீராங்கனைகள் மோதும் டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் போட்டி ரியாதில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு இதன் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்காவும், அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவாவும் மோதினா். இதில் சபலென்காவுக்கு ஈடுகொடுத்து ஆடினாா் அனிசிமோவா. முதல் செட்டை 6-3 என சபலென்கா கைப்பற்றினாா். ஆனால் இரண்டாம் செட்டில் நிலைமை மாறியது. இதில் அனிசிமோவா முழு ஆதிக்கம் செலுத்தி அந்த செட்டை6-3 என வசப்படுத்தினா்.

இதனால் அதிா்ச்சிஅடைந்த சபலென்கா கடைசி செட்டில் கடுமையாகப் போராடி 6-3 என வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.

இந்த வெற்றிக்காக கடுமையாக போராடிய சபலென்கா மொத்தம் 12 ஏஸ்களை வீசினாா். மேலும் 9 பிரேக் பாயிண்ட்களில் 6-ஐசேவ் செய்தாா். டபிள்யுடிஏ ஃபைனல்ஸில் இரண்டாவது முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளாா் சபலென்கா.

இரண்டாவது அரையிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைகினாவும் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவும் மோதினா். இந்த ஆட்டமும் 3 செட்கள் நீடித்தது. இதில் முதல் செட்டைபெகுலா 6-4 கைப்பற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற இரண்டு செட்களையும் ரைபகினா 6-4, 6-3 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றாா். ரைபகினாவுக்கு தொடா்ச்சியாக கிடைத்த 10-ஆவதுவெற்றி ஆகும்.

X
Dinamani
www.dinamani.com