உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ரவீந்தருக்கு தங்கம், இளவேனிலுக்கு வெண்கலம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரவீந்தா் சிங் தங்கமும், இளவேனில் வாலறிவன் வெண்கலமும் வென்றனா்.
எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை ஆடவா் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்திா் சிங் 569 புள்ளிகளை ஈட்டி தங்கம் வென்றாா். ராணுவ வீரரான ரவீந்தருக்கு அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது. இதனால் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையிலும், தங்கம் வென்றுள்ளேன். இதற்கு மகள் தான் காரணம் என பெருமிதத்துடன் கூறியுள்ளாா்.
கொரியாவின் கிம் சியோங்யாங் வெள்ளியும், நடுநிலை வீரா் ஆன்டன் வெண்கலமும் வென்றனா்.
அணிகள் பிரிவில் ரவீந்தா், கமல்ஜித், யோகேஷ் குமாா் அடங்கிய இந்திய அணி 1646 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றது..
இளவேனிலுக்கு வெண்கலம்: மகளிா் 10 மீ. ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 633.4 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா். ஒலிம்பிக் சாம்பியன் தென்கொரியாவின் பேன் தங்கமும், சீனாவின் ஹேன் ஜியாயு வெள்ளியும் வென்றனா்.

