

புன்டெஸ்லீகா தொடரில் யூனியன் பெர்லின் அணியுடனான போட்டியில் பயர்ன் மியூனிக் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.
இந்தப் போட்டியில் பயர்ன் மியூனிக் 2-2 என சமனில் முடிந்தது. இதன் மூலம் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் மியூனிக் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது.
இந்நிலையில், புன்டெஸ்லீகா தொடரில் யூனியன் பெர்லின் அணியுடனான போட்டியில் 2-2- என சமனில் முடிந்தது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யூனியன் பெர்லின் அணியின் 27,83-ஆவது நிமிஷத்தில் தியோகி கோல் அடித்தார். பயர்ன் மியூனிக் அணியில் 38ஆவது நிமிஷத்தில் லூயிஸ் டய்ஸ் கோலடித்தார்.
இரண்டாம் பாதியில் 2-1 என இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஹாரி கேன் 90-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்.
வெற்றிபெறா விட்டாலும் தோல்வி அடையவில்லை என்பது பயர்ன் மியூனிக் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.