

கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி 400 அசிஸ்ட்டுகளைச் (கோல் அடிக்க உதவி புரிதல்) செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஒரு ஸ்டிரைக்கராக இருந்து, நிகழ்காலத்தில் யாருமே நிகழ்த்தாத ஒரு மைல்கல்லை எட்டி சாதனை புரிந்துள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் ரவுன்ட் ஒன்றின் மூன்றாவது போட்டியில் நாஸ்வில்லியுடன் இண்டர் மியாமி மோதியது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 10,39-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் 76ஆவது நிமிஷத்தில் சக ஆர்ஜென்டீன இளம் வீரருக்கு சிறப்பான ஒரு அசிஸ்டினை செய்தார். இதன் மூலம் தனது 400-ஆவது அசிஸ்டை நிறைவு செய்தார்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார். இண்டர் மியாமி அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
கால்பந்து வரலாற்றில் அதிக அசிஸ்ட்டுகள்
1. ஃபெரென்ங் புஸ்கஸ் - 404
2. லியோனல் மெஸ்ஸி - 400
3. பீலே - 369
4. ஜோகன் க்ரூஃப் - 358
5. லூயிஸ் சௌரஸ் - 319
6. தாமஸ் முல்லர் - 314
7.கெவின் டீ புரூன் - 304
8. ஆஞ்சல் டீ மரியா - 300
9. நெய்மர் ஜூனியர் - 286
10. லூயிஸ் ஃபிகோ - 283
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.