மெஸ்ஸி மேஜிக்..! முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

எம்எல்எஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இன்டர் மியாமி பற்றி...
Inter miami advanced to semi finals
முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது இன்டர் மியாமிபடங்கள்: எக்ஸ்/ இன்டர் மியாமி.
Published on
Updated on
1 min read

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி 4-0 என வென்று முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள். 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

எம்எல்எஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் நாஸ்வில்லியுடன் இண்டர் மியாமி சேஸ் ஸ்டேடியத்தில் மோதியது.

இந்தப் போட்டியில் 10,39-ஆவது நிமிஷங்களில் மெஸ்ஸி அசத்தலாக கோல் அடித்தார். அடுத்ததாக மற்றுமொரு ஆர்ஜென்டீன வீரர் டாடியோ அல்லேண்டே 73,76ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.

இறுதிவரை போராடிய நாஸ்வில்லி அணி ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம் இன்டர் மியாமி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்னும் மூன்று போட்டிகளில் மெஸ்ஸியின் அணி வென்றால் எம் எல் எஸ் கோப்பையை வெல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Saturday's statement performance at Chase Stadium gave Miami their first-ever Conference Semifinal berth in the Audi MLS Cup Playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com