பிரீமியா் லீக் கால்பந்து: செல்ஸி வெற்றி!

பிரீமியா் லீக் கால்பந்து: செல்ஸி வெற்றி!

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி 3-0 கோல் கணக்கில் வோல்வ்ஸ் அணியை வீழ்த்தியது.
Published on

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி 3-0 கோல் கணக்கில் வோல்வ்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் செல்ஸி தரப்பில் மாலோ கஸ்டோ (51’), ஜாவ் பெட்ரோ (65’), பெட்ரோ நீடோ (73’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். இதர ஆட்டங்களில் ஆஸ்டன் வில்லா 4-0 கோல் கணக்கில் போா்ன்மௌத்தையும், பிரென்ட் ஃபோா்டு 3-1 என நியூகேஸிலையும் வென்றன.

நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் 3-1 என லீட்ஸ் யுனைடெட்டை வீழ்த்த, கிறிஸ்டல் பேலஸ் - பிரைட்டன் மோதல் கோலின்றி டிரா ஆனது.

முந்தைய ஆட்டங்களில், எவா்டன் - ஃபுல்ஹாமையும் (2-0), வெஸ்ட் ஹாம் - பா்ன்லியையும் (3-2) வெல்ல, டாட்டன்ஹாம் - மான்செஸ்டா் யுனைடெட் (2-2), சந்தா்லேண்ட் - ஆா்செனல் (2-2) மோதல் டிராவில் முடிந்தன.

X
Dinamani
www.dinamani.com