புதுப்பிக்கப்படும் பார்சிலோனா திடலைப் பார்வையிட்ட மெஸ்ஸி உருக்கம்!

பார்சிலோனா திடலைப் பார்வையிட்ட மெஸ்ஸி குறித்து...
Messi visits Barcelona's renovated stadium.
புதுப்பிக்கப்படும் பார்சிலோனா திடலைப் பார்வையிட்ட மெஸ்ஸி. படம்: எக்ஸ் / லியோ மெஸ்ஸி.
Published on
Updated on
1 min read

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள 'கேம்ப் நவ்' கால்பந்து திடலை, லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.

கால்பந்து ரசிகர்கள் அனைவரும் மீண்டும் பார்சிலோனாவுக்கு மெஸ்ஸி வருவாரா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் பல ஆண்டுகளாக விளையாடினார்.

கடைசியாக அணியில் ஏற்பட்ட பெருந்தொகையை செலவிட முடியாத நிலையில் அந்த அணியிலிருந்து கடந்த 2021-இல் விலகினார்.

தற்போது, அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் விளையாடி வருகிறார்.

பார்சிலோனாவின் சொந்த திடலான 'கேம்ப் நவ்' திடலை புதுப்பித்து வருகிறார்கள்.

தற்போது இந்தத் திடலில் 27 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முழுமையாக புதுப்பித்தபிறகு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அமரும்படி உருவாக்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கால்பந்து திடலாக இது உருவாகி வருகிறது.

இந்தத் திடலை உணர்ச்சிபொங்க மெஸ்ஸி பார்த்த புகைப்படங்கள், விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இது குறித்து மெஸ்ஸி கூறியதாவது:

என்னுடைய ஆன்மாவைத் தொலைத்த இடத்துக்கு நள்ளிரவு மீண்டும் வந்தேன்.

இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதராக என்னை ஆயிரத்துக்கும் அதிகமான முறை உணரவைத்தது இங்குதான். இங்குதான் நான் மிகவும் மனப்பூர்வ மகிழ்ச்சியாக இருந்தேன்.

மீண்டும் இங்கு வருவேன் என நம்புகிறேன். என்னால் இனிமேல் முடியாத ஒரு வீரராக குட் பை சொல்வதற்காக மட்டும் வரமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை இந்தத் திடலில் மெஸ்ஸி விளையாடுவாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இது குறித்து பார்சிலோனா கூறியதாவது:

எஃப்சி பார்சிலோனாவின் கேம்ப் நவ் திடலைப் பார்க்க மெஸ்ஸி திடீரென வந்தது எங்களுக்கே திகைப்பூட்டும்படிதான் இருந்துள்ளது எனக் கூறியுள்ளது.

தனது எக்ஸ் பக்கத்தில், "எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வாருங்கள் லியோ" எனக் குறிப்பிட்டு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது.

பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளில் 672 கோல்கள் 269 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.

பார்சிலோனாவில் மெஸ்ஸி 35 கோப்பைகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Lionel Messi visited the 'Camp Nou' football stadium in Barcelona, ​​Spain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com